''கோட்டபாயவை இன்னமும் கைது செய்யாதது ஏன்..?, பிள்ளையான் கருவி, கோட்டாவே மூலகர்த்தா.." என தகவல்


 
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி. அவரைக்கைது செய்து விசாரிக்கும் அரசு. தாக்குதலின் கர்த்தா எனக்கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் கைது செய்து இன்னும் விசாரிக்கடவில்லை என தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர்,


பிள்ளையான்  என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து சிறையில்  வைத்துள்ளீர்கள்.  அவர் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்.
 
நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மையமாக வைத்து அவர் விசாரிக்கப்படுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்தது 2019.05 21 ஆம் திகதி அதேமாதம் 27 ஆம் திகதி முன்னர் இந்த நாட்டில் பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டபாய ராஜபக்ஷ ரொய்ட்டர் செய்தி  சேவைக்கு
''இஸ்லாம் மதத்தினால் இந்த மண்ணில் எவ்வாறு தீமை நடக்கபோகின்றது, இஸ்லாம் இந்த நாட்டை எவ்வாறு அழிக்கப்போகின்றது .இதற்கு பின்னால் யார் இருந்தார்கள்'' என்பதனை  சொல்கின்றார்.
ஆகவே பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே. கர்த்தாக்களான கோத்தபாய ராஜபக்ஷ் ஏன் இந்த நாட்டில் இன்னும் விசாரிக்கப்படவில்லை? .
2019-05-27 ஆம் திகதி   ரொய்ட்டர் செய்தி  சேவைக்கு கோத்தபாய ராஜபக்ஷ் வழங்கிய பேட்டியை நான் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன் என்றார்.


இதேநேரம் கறுப்பு ஜூலை தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்ட அவர்,

இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள்.இந்த நாட்டில்   ஜூலை இனப்படுகொலை நடந்து 42 வருடங்களாகிவிட்டன.
ஜே .ஆர். ஜெயவர்த்தன தலைமையில் லலித், காமினி திசாநாயக்க போன்றவர்களின் வழிகாட்டலில் தமிழர்கள் மீது மிக மோசமான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது.
வெலிக்கடை சிறையிலிருந்த குட்டிமணி, தங்கதுரை,ஜெகன்  உட்பட பலர் வெட்டி சாய்க்கப்பட்டார்கள் பிறக்கப்போகின்ற தமிழீழத்தை பார்க்கவா  போகின்றீர்கள் எனக்கேட்டு அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.
ஜூலை 23 தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்புநாள். 42 வருடங்கள் கடந்தும் எந்த பொறுப்புக்கூறலும் இல்லாமல், நீதி இல்லாமல் .விசாரணைகள் இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நான் பதிவு செய்கின்றேன். இந்த நாட்டில் எந்த அரசு வந்தாலும் இதற்கு ஒரு மன்னிப்புக்கோரலையோ நீதியான விசாரணைகளையோ  பரிகரத்தையோ தேட முற்படவில்லை என தெரிவித்தார்.